அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
"அஜித், விஜய் படங்களை இயக்கவே பயமாக இருக்கும்" இயக்குனர் வெங்கட் பிரபு பகீர் பேட்டி.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் பல திரைப்படங்கள் தொடர் வெற்றி அடைந்துள்ளன. மேலும் இவர் இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடித்த வெளியான திரைப்படம் 'மங்காத்தா' இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து அஜித் மற்றும் வெங்கட் பிரபு திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வந்த வெங்கட் பிரபு, தற்போது விஜய் நடிப்பில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, மோகன் என பல திரைபிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தினை குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் வெங்கட் பிரபுவிடம் கெட்ட வார்த்தையில் பேசி விஜய் பட அப்டேட் கேட்ட ரசிகரை குறித்து வெங்கட் பிரபு மனம் வருந்தி பதிவிட்டு இருந்தார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி பலரும் விஜய் ரசிகர்கள் தரப்பில் மன்னிப்பு கேட்டு வந்தனர்.
இதனை அடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபு விஜய், அஜித் படங்களை இயக்குவதை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "விஜய் மற்றும் அஜித் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படங்கள் இயக்குவது என்றாலே பயமாக இருக்கும். ஆரம்பத்தில் இருவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து தயக்கமாக இருந்தாலும், தற்போது படம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.