"நாளொன்றுக்கு 170 சிகிரெட் குடிப்பேன்.. நீங்களும்"; இளம் இயக்குனர்களுக்கு வெற்றிமாறன் அட்வைஸ்.!



director-vetrimaran-advice-to-youngster-no-smoking

 

தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன், வடசென்னை, பாவக்கதைகள் உட்பட பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவர் சொற்ப அளவிலான படங்களை இயக்கியிருந்தாலும் தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளார். 

இந்நிலையில், குறும்பட போட்டி தொடர்பான நிகழ்ச்சியில் இளம் இயக்குநர்களிடையே பேசிய வெற்றிமாறன், "எனது வாழ்க்கையில் அனைத்தும் லயோலா கல்லூரியில் தான் ஆரம்பம் ஆனது. இதயம் நாம் பிறப்பதற்கு முன்னரில் இருந்து வேலை பார்த்துக்கொண்டே இருக்கும். 

பலரும் ஜிம்முக்கு சென்று உடலை கட்டுகோப்பாக்க மாற்ற முயற்சித்து, அங்கிருந்து வந்ததும் சிகிரெட் பிடிப்பார்கள். ஷார்ட்பிலிம் எடுக்கும் பல இளைஞர்களும் இரவு நேரத்தில் மது & புகையை குடித்துவிட்டுதான் ஸ்கிரிப்ட் எழுதுவீர்கள். அது எனக்கே தெரியும். 

Director vetrimaran

இதை நான் எதற்கு சொல்ல வருகிறேன் என்றால், நான் கல்லூரியில் படிக்கும்போது நாளொன்றுக்கு 60 - 70 சிகிரெட் பிடிப்பேன். முதல் படம் எடுக்கும் போது நாளொன்றுக்கு 170 - 180 சிகிரெட் பிடிப்பேன். இதனால் எனது உடல்நிலை மாறி, எனது 100% உழைப்பை கொடுக்க முடியவில்லை. 

மருத்துவரிடம் நான் அணுகும்போது, சிகிச்சைக்கு பின்னர் கட்டாயம் புகையை விடவேண்டும் என்று கூறினார்கள். புகையை எப்படி விடலாம் என புகைபிடித்துக்கொண்டே யோசனை செய்து வருகிறேன். இதனால் நான் அதனை கைவிட ஆரோக்கியமான உணவின் பக்கம் திரும்பினேன்" என்று பேசினார். 

Smoking Is Injurious to Health 

புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது; அது உயிரை கொல்லும்