தனுஷ் படத்தை ஓ.டி.டியில் வெளியிடுவதில் சிக்கல்..ரசிகர்கள் கடும் எதிர்ப்பு.!



Don't release dhanush movie in OTT

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை ஒரு ஓ.டி.டி தளம் அதிக விலை கொடுத்து வாங்க முன் வந்துள்ளது. இதனால் ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி. டியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் நடிகர் தனுசுக்கு இப்படத்தை ஓ.டி.டியில் வெளியிட விருப்பம் இல்லை. இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதில் திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

OTT

தனுஷ் ரசிகர்களும் ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி.டியில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டரில் தனுசின் வெற்றி படமான ஜகமே தந்திரம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளரை கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.