மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கங்குவா திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா.?
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி தியோஸ், நிஷா பதானி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடக்கின்றது. இங்கே ஒரு சில வாரங்கள் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்றும், இதுதான் இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் படபிடிப்பாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
மேலும் சூர்யா தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பும் முடிவடைய இருப்பதாக சொல்லப்படுகிறது. சூர்யா நடிப்பில், 2023-ஆம் ஆண்டில் ஒரே ஒரு படம் கூட வெளியாகவில்லை. கடந்த ஆண்டிலிருந்து அவர் இந்த ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் எனவும் சொல்லப்படுகிறது.
ஒரு பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் எதிர்வரும் வருடம் மத்தியில் வெளியாகலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
3டி மற்றும் ஐ மேக்ஸ் வடிவத்தில் இந்த திரைப்படம் வெளியாகயிருக்கிறது. எதிர்வரும் வருடம் வெளியாகவுள்ள இந்த திரைப்படம் அதித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.