பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திரௌபதி பட நடிகரை வைத்து கொடைக்கானலில் 4 கதாநாயகியுடன் ஆபாச படம் எடுக்க முயற்சி.. ஷாக் உண்மையை போட்டுடைத்த நடிகர்.!
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரை கேடி கும்பல் ஏமாற்ற முயற்சித்த தகவல் குறித்து நடிகர் நிஷாந்த் மனம் திறந்து பேசினார்.
தமிழில் ரேணிகுண்டா, நான் ராஜாவாக போறேன், சிகரம் தோடு, பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உட்பட பல படங்களில் நடித்திருந்த நடிகர் நிஷாந்த். இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், "திரௌபதி படத்தில் நான் காவலராக நடித்தது தொடர்பாக இரண்டு கருத்துக்களும் வந்தன. எனது நண்பர்களே காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்ததை சிலர் கலாய்த்தார்கள், சிலர் தரமாக இருப்பதாக கூறினார்கள்.
நான் திரௌபதி படத்தில் காவலர் வேடத்தில் நடிப்பது தொடர்பாக முதலில் இயக்குனர் மோகன் ஜியிடம் பேசி நடித்தாலும், எனக்கே சந்தேகமாக இருந்தது. இறுதியில் நடித்து நல்ல கருத்துக்களும், கழுவி ஊத்தும் கருத்துக்களும் அதிகம் வந்தன.
திரைப்படம் பார்த்துவிட்டு வந்த ஒரு தம்பி நான் நன்றாக நடித்திருப்பதாக கூறி நேரில் பேசிவிட்டு சென்றான். அவன் தனியார் சேனலுக்கு வீடியோ கொடுத்ததில் கழுவி ஊற்றியிருந்தான். நான் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இனி நடிப்பதில் கவனத்துடன் இருக்க விரும்புவேன்.
என்னை ஒரு இயக்குனர் ஏமாற்ற முயற்சித்தார். என்னிடம் 2 கதை உள்ளது என 1 மாதம் பின்தொடர்ந்து, 4 கதாநாயகிகளை காண்பித்து படம் நடிக்க கொடைக்கானலில் சூட்டிங் என்று கூறினார்கள். நான் முதலில் இருந்து கதையை கேட்டும் சொல்லவில்லை. கொடைக்கானலில் சூட்டிங் என்று கூறியதும் நான் சுதாரித்து, நம்மை வைத்து வேறு எதோ படம் எடுக்கப்போகிறார்கள் என விலகிக்கொண்டேன்" என தெரிவித்தார்.