சித்ரா வழக்கில் பகீர் திருப்பம்.. சித்ராவின் ஹேண்ட் பேக்கில் கஞ்சா, சிகரெட்.. திசை மாறும் விசாரணை..



Drugs found in VJ chitras handbag

தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கைப்பையில் கஞ்சா, கஞ்சா உள்ளடக்கிய சிகரெட் போன்றவை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள்மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த மாதம் 9 ஆம் தேதி தனியார் ஹோட்டல் ஒன்றில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சித்ராவின் மரணம் தொடர்பாக வெளியான அறிக்கையில், சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டாலும், இல்லை இல்லை, சித்ரா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் எனவும், இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கவேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர் மற்றும் சித்ராவின் ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

VJ Chithra

இதனிடையே இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, மறைந்த நடிகை சித்ராவின் கைப்பையில்(ஹேண்ட் பேக்) இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா அடைக்கப்பட்ட சிகரெட் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சித்ராவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என்று அவரின் மாமனார் ஏற்கனவே போலீசாரிடம் தெரிவித்திருந்தநிலையில், தற்போது போதை பழக்கமும் இருப்பது தெரியவந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எங்கள் மகளுக்கு இப்படி ஒரு பழக்கம் இருந்ததே தெரியாது என சித்ராவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சித்ராவுக்கு போதை பொருள் வாங்கி கொடுத்தது யார்? சித்ராவின் கணவர் ஹேம்நாத்துதான் சித்ராவுக்கு போதை பொருள் வாங்கி கொடுத்தாரா என்பது குறித்து தற்போது விசாரணை திசைமாறியுள்ளது.