மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விரைவில் வெளியாகும் துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர்.. வெளியான அசத்தல்.!
விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் எடுத்து கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலான நிலையில், தற்போது வரை ரிலீஸ் ஆகவில்லை.
இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன், ரித்து வர்மா, பார்த்திபன், ராதிகா, திவ்யதர்ஷினி, விநாயகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தை வெளியிட தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். அதன்படி இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தகவல் விக்ரம் ரசிகர்களுடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.