#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேலா ராமமூர்த்தி பெயரில் மோசடி செய்த மர்ம நபர்.! இணையத்தில் வைரலாகும் பதிவு.!?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் வேலா ராமமூர்த்தி. இவர் இதற்கு முன்பாக பல தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தற்போது முதன்முதலில் சீரியல் நடிகராக களமிறங்கிய வேலா ராமமூர்த்தி, சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடினார். பலரும் இவருக்கு சமூக வலைதளங்களிலும், நேரிலும் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது.
இதனையடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதன் பின்பாக இவரின் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது மர்ம நபர் ஒருவர் இவருடைய பெயரை வைத்து மற்றவர்களிடம் பணம் கேட்டு மோசடி செய்வதாக புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார்.
அவரின் பதிவில், " நண்பர்களே என் பிறந்தநாள் அன்று யாரோ ஒருவர் என் பெயரை வைத்து பணம் கேட்டு மோசடி செய்யும் காரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார். இப்பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.