#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"தாய்லாந்தில் ஜாலி பண்ணும் ஆதி குணசேகரன் வீட்டு மருமகள்!" அவரா இது என்று வாய் பிளக்கும் ரசிகர்கள்!
சன்டிவியில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் "எதிர்நீச்சல்". ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆதி குணசேகரனை, அவ்வீட்டின் மருமகள் எவ்வாறு சமாளித்து வாழ்கின்றனர் என்பதே இத்தொடரின் கதை.
ஆணாதிக்கம் மற்றும் பிற்போக்குத்தன்மை கொண்டவர் ஆதி குணசேகரன். இவர் அவரது மனைவி உட்பட அவ்வீட்டின் மருமகள் அனைவரையும் அடக்கி வைப்பதும், அவர்கள் அதற்கு எதிராக குரல் எழுப்பி தங்கள் உரிமையைக் காக்கப் போராடுவதும் தொடர்கதையாகி உள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் 3 மருமகளில் ஒருவரான ஜனனி கேரக்டரில் நடிப்பவர் மதுமிதா. புடவை அணிந்து ஹோம்லியான புதுமைப்பெண்ணாக தொடரில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர். இந்நிலையில் இவர் தாய்லாந்து சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மதுமிதா தனது நெருங்கிய தோழியும், சக நடிகையுமான வைஷ்ணவியுடன் தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ளார். "இரு பெண்கள் மட்டுமே மேற்கொண்டுள்ள நீண்ட பயணம்" என்ற கேப்ஷனுடன் மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர்.