#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆட்டோ ஓட்டுனராக மாறிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்.!
வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து அறியப்படும் நடிகையாக இருந்து வந்தவர் கனிகா. இவர் முதன் முதலில் பிரசன்னா நடிப்பில் வெளியான 5 ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
இப்படத்திற்கு பின்பு ஆட்டோகிராப், வரலாறு போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வந்தார் கனிகா.
இது போன்ற நிலையில் திருமணத்திற்கு பின்பு திரைத்துறையில் நடிக்காமல் பிரேக் எடுத்துக் கொண்ட கனிகா தற்போது சீரியல்களிலும், ஒரு சில திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் கனிகா, இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஆட்டோ ஓட்டிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கைவசம் தொழிலுக்கு என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலில் இவர் நடிப்பிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.