#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"டி.ஆர்.பி யில் அடி வாங்கிய எதிர் நீச்சல் சீரியல்!" என்ன செய்யப் போகிறது சீரியல் குழு?!
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பிரபலமடைந்த சீரியல் "எதிர் நீச்சல்". இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சன்டிவியில் தேவயானி நடித்த "கோலங்கள்" சீரியலை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல், தொடர்ந்து டி ஆர் பி யில் பல மாதங்களாக முதலிடத்தில் இருந்து வந்தது. பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கத்துக்கு எதிரான கருத்துக்களை சொல்லும் இந்த சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.
இந்த ஹைலைட்டே ஆணாதிக்க கதாப்பாத்திரத்தில் நடித்த மறைந்த நடிகர் மாரிமுத்துவின் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் தான். அவர் மறைந்த பிறகு சில வாரங்கள் அவரது கதாப்பாத்திரம் இல்லாமலேயே சீரியலை கொண்டு சென்றனர்.
இதையடுத்து நடிகரும், எழுத்தாளருமான வேல. ராமமூர்த்தி ஆதிகுணசேகரனாக நடிக்க வந்தார். இவரால் தொடர்ந்து இதில் நடிக்க முடியவில்லை. ரசிகர்களாலும் இவரை மாரிமுத்துவின் கேரக்டரில் வைத்து பார்க்க முடியவில்லை. எனவே இந்த மாதம் வெளியான டி ஆர் பி யில் இந்த சீரியல் அடி வாங்கியுள்ளது.