#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எதிர்நீச்சல் சீரியலிலிருந்து வேலா ராமமூர்த்தி விலகி விட்டாரா.? அவரின் பதிவால் குழப்பமடைந்த ரசிகர்கள்..
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். ஆணாதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் குறிப்பிட்டு காட்டப்படுவதால் இந்த சீரியலுக்கு சிறுவயது முதல் முதியோர் வரை ரசிகர் கூட்டங்கள் அதிகமாக இருந்து வருகின்றனர்.
திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பபட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலிற்கு டிஆர்பி ரேட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. இதுபோன்ற நிலையில், இந்த சீரியலின் பிரபலமான ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து என்பவர் மாரடைப்பில் உயிரிழந்தார். இவர் நடிப்பிற்கென்று தற்போது வரை ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அடுத்த யார் வரப்போகிறார் என்று ரசிகர்கள் குழப்பமடைந்து வந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு வேலா ராமமூர்த்தி முடிவு செய்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இதனையடுத்து தற்போது எதிர்நீச்சல் சீரியலில் வேலா ராமமூர்த்தி காணாமல்போய் விட்டதாக கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் வேலா ராமமூர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் பாரிஸில் இருப்பதாக பதிவிட்டுள்ளார். இப்பதிவை பார்த்து ரசிகர்கள் வேலா ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகி விட்டாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.