#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீ டூ விவகாரம்; அதற்கெல்லாம் காரணம் இதுமட்டும்தான்.! எதிர்நீச்சல் நடிகை பளீச் பேட்டி!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் எதிர்நீச்சல். இந்தத் தொடரில் ஜான்சிராணி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. அவர் தற்போது சினிமா, வெப் தொடர்கள் என பிசியாக இருந்து வருகிறார்.
மேலும் அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில், அவரிடம் மீ டூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவர், பல நடிகைகள் முன்பு தாங்கள் எதிர்கொண்ட பாலியல் கொடுமைகளை தற்போது கூறி வருகின்றனர்.ஒரு விஷயம் பிடிக்கவில்லையென்றால், அதைப் பற்றி அப்பொழுதே தைரியமாக சொல்லி விட வேண்டும்.
பல வருடங்களுக்குப் பின்பு எனக்கு அப்படி நடந்தது, அவர்கள் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. சினிமா துறையில் அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைக்கும் போது ஒரு சில நடிகைகள் குடும்ப சூழ்நிலையால் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். எவராவது மறுப்பு தெரிவித்திருந்தால் மீண்டும் அவ்வாறு கேட்கும் தைரியம் வராது. இதற்கெல்லாம் காரணம் பெண்களின் பலவீனம்தான் என கூறியுள்ளார்.