#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னா ஒரு அழகு..! எதிர்நீச்சல் பட இரண்டாவது ஹீரோயினா இது..? இப்போ எப்படி இருக்கார் பாருங்க..
எதிர்நீச்சல் படத்தில் வந்த இரண்டாம் ஹீரோயினின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகர் தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் துறை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் எதிர்நீச்சல். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நந்திதா நடித்திருந்தார்.
மாரத்தான் ஒட்டப்பந்தயத்தை மையமாக கொண்டு உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரும் வெற்றிபெற்றது. அதேபோல் இந்த படம் நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட அதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் நடிகைகளுக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அந்தவகையில் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தவர்தான் சுசா குமார். இவர் படத்தில் வரும் காட்சிகள் குறைவுதான் என்றாலும், திரையில் தோன்றிய சில காட்சிகளிலையே ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமாகிவிட்டார். அதிலும் நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே.. என்ற ஒரு பாடலுக்கு நடித்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் கனவு நாயகியாகவே இருந்துவருகிறார்.
ஆனாலும் எதிர்நீச்சல் படத்தை அடுத்து இவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் அமையவில்லை. இதனால் படவாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார். எப்போதும் புது புது புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர் அண்மையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகிவருகிறது.