மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தற்கொலைக்கு தூண்டல், கருக்கலைப்பு.., ரூ.50 லட்சம் பணத்தை பிடிங்கியும் தீராத வரதட்சணை வெறி.. பிரபல நடிகரின் மனைவி கதறல்..!!
போஜ்புரி திரைப்பட நடிகர் பவன் சிங் (வயது 36). இவரின் மனைவி ஜோதி. இந்த நிலையில், ஜோதி தனது கணவருக்கு எதிராக தெரிவித்துள்ள புகாரில், "கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி பவன் சிங்கும், எனக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணமான சில நாட்களிலேயே பவன்சிங், அவரது தாயார், சகோதரி ஆகியோர் சேர்ந்து எனது தோற்றம் தொடர்பாக கேலி செய்திருந்தார்கள்.
மேலும் எனது மாமியார் என்னிடமிருந்த ரூ.50 லட்சம் தொகை எடுத்துக் கொண்டார். இந்த பணத்தை எனது தாய் மாமா எனக்கு கொடுத்திருந்த நிலையில், அதனை அவர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர் ஒவ்வொரு நாளும் என்னை அடித்து கொடுமை செய்ய தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் தற்கொலையை தூண்டினார்கள். நான் கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு மருந்து கொடுத்து கர்ப்பத்தையும் கலைத்தார்கள். எனது கணவர் தினமும் மதுபானம் அருந்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தினார். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்துகிறார். அத்துடன் அவர் என்னிடம் மெர்சிடஸ் பென்ஸ் கார் வாங்கும்படி வரதட்சணை கொடுமை செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.