மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செந்தில் கணேஷ்- ராஜலக்ஷ்மி ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்! வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் பல ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு சூப்பர் சிங்கர் டைட்டிலை பெற்றவர் மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ்.
அதனை தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றார். மேலும் அவருக்கு சினிமாவில் படுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் அவர் தனது மனைவி ராஜலக்ஷ்மியுடன் ஜோடி சேர்ந்து சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் பாடலையும், விஸ்வாசம் படத்தில் டங்கா டங்கா போன்ற பாடலையும் பாடியுள்ளார்.
அதனை தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடியாக என் காதலி சீன் போட்றா என்ற படத்தில் நில்லா கல்லுல என்ற பாடலை பாடியுள்ளனர்.
இந்நிலையில் அந்த பாடலை இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கிராமிய இசையை உலகெங்கும் கொண்டு சென்று பட்டையைக் கிளப்பும் ஜோடிகள் செந்தில்,ராஜலட்சுமி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்என பதிவிட்டுள்ளார்.
Happy to release #Enkadhalisenepodura single track, my wishes an prayers to music director @AmrishRocks1 director #ramsevaa 🎉கிராமிய இசையை உலகெங்கும் கொண்டு சென்று பட்டையைக் கிளப்பும் ஜோடிகள் செந்தில்,ராஜலட்சுமி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் https://t.co/AeNh7a8d0x
— M.Sasikumar (@SasikumarDir) 1 March 2019