மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகையை கொலை செய்ய முயற்சித்த தமிழ் வில்லன் நடிகர்.. நடிகையின் புகாரால் அதிர்ச்சியில் திரையுலகம்..!!
மலையாளத்தில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வருபவர் அஞ்சலி நாயர். இவர் மலையாளம் மட்டுமல்லாமல், பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரையுலகில் தனது திரைவாழ்க்கையை தொடங்கிய அஞ்சலி நாயர் கொட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல், அகடு, அண்ணாத்த, நமன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இதனை தவிர்த்து பல குறும்படங்களில் நடித்ததால் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் இவர் தமிழ் திரையுலகில் இருக்கும் பிரபல வில்லன் நடிகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
அதாவது, தனது முதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும், இதனை ஏற்க மறுத்ததால் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஒரு முறை ரயில் முன் தள்ளிவிட முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.