மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல இயக்குனர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.! சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறை.!
பிரபல திரைப்பட இயக்குனர் ஜனநாதன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஷியாம், அருண்விஜய் நடிப்பில் வெளியான இயற்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். இதனைத்தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகர் விஜய்சேதுபதியை வைத்து லாபம் என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குனர்களுடன் சேர்ந்து ஜனநாதனும் உண்ணாவிரதம் முன்னர் மேற்கொண்டவர் ஆவார். அவரின் லாபம் திரைப்படத்திலும் ஈழ பாடகி கிலியோ என்பவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் நேற்று மதியம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் அவர் சுயநினைவின்றி மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவரது உதவியாளர்கள், அவரை மீட்டு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டுமென திரைத்துறையினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.