கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
#HBD மீரா நந்தன்.. Zara Zara பாடல் நினைவுக்கு வருதா?.. நடிகை, பாடகிக்கு இன்று பிறந்தநாள்.!
நடிகை, பாடகி, சின்னத்திரை நட்சத்திரம் என பன்முகங்களில் வலம்வரும் பிரபல மலையாள நடிகை மீரா நந்தன். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இதனைத்தவிர்த்து, தமிழ், தெலுங்கு, கன்னடா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
கேரளாவில் உள்ள கொச்சி நகரில் பிறந்த நடிகை மீரா நந்தன், Mass Communication with Journalism பயின்றுள்ளார். நடிகர் மோகன் லாலுடன் கடந்த 2007 ஆம் வருடம் விளம்பரம் வாயிலாக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த மீரா, பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி இருக்கிறார். பிளாக் பாரஸ்ட் என்ற படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்து, தேசிய அளவிலான விருதையும் தன்வசப்படுத்தினார்.
இதுமட்டுமல்லாது, மலையாள திரையுலகில் நடிகை டாப்ஸியின் பின்னணி குரல் பதிவாளராகவும் மீரா நந்தன் இருந்து வருகிறார். முல்லா என்ற மலையாள திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமான நடிகை மீரா, தமிழில் வால்மீகி படத்தில் அறிமுகமாகினர்.
அதனையடுத்து, மலையாளம், கன்னடா, தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூரிய நகரம், சண்டமாருதம், நேர்முகம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், அவை பெரியளவில் வெற்றி பெறவில்லை என்பதால், அவர் தமிழ் திரையுலகில் அறியப்படாத நடிகையாக இருக்கிறார்.
மலையாளத்தில் திரைப்பட பாடகியாகவும் வலம்வரும் மீரா நந்தன், தமிழ் மற்றும் ஹிந்தியில் பாடல் பாடியது இன்றளவும் வைரலாகி வருகிறது. வசீகரா என் நெஞ்சினிலே என்ற தமிழ் பாடலை, ஹிந்தியில் ஜரா ஜரா ஏ இக்குதேறா என்று அருமையாக பாடினார்.
இந்த பாடலை பாடிய நடிகை, பாடகி, தொகுப்பாளினி தான் நடிகை மீரா நந்தன். அவருக்கு இன்று பிறந்தநாள்.