மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசா விபத்தில் சிக்கினாரா... வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அவரின் முதல் சீரியலிலேயே தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2020 யில் அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில் அதற்கு ஐலா என பெயர் வைத்தனர். பின்னர் ராஜா ராணி 2 சிரீயலில் நடித்து வந்தார் ஆல்யா மீண்டும் கர்ப்பமாகி அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
இந்நிலையில் மீண்டும் தனது உடல் எடையை குறைத்து சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சிறிய விபத்து ஒன்றில் சிக்கிய ஆல்யாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அதனை அவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.