மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிடிஎஃப் வாசனிற்க்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் திருமணமா.. திருமண பத்திரிக்கையை வெளியிட்ட நடிகை.?
சமூக வலைத்தள பக்கத்தில் பிரபலமான யூடியூபராக வலம் வருபவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் பைக்கில் வேகமாக சென்று அதனை வீடியோவாக வெளியிட்டு பிரபலமானவராக அறியப்படுகிறார். இவருக்கு பல லட்சக்கணக்கான பாலோவர்ஸ்கள் இருந்து வருகின்றனர்.
பல சுற்றுலா தலங்களுக்கு பைக்கிலேயே சென்று வீடியோ வெளியிட்டு தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார் டிடிஎஃப் வாசன். இதுபோன்று பல வீடியோக்களில் வேகமாக சென்று வருவதால் போக்குவரத்து விதிமீறல்களை தொடர்ந்து செய்து வருகிறார் டி டி எஃப் வாசன்.
இதனால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார். சமீபத்தில் இவர் மேல் வழக்கு பதியப்பட்டு நீதிமன்றம் வரை சென்று பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது 'மஞ்சள் வீரன்'என்னும் திரைப்படத்தில் டிடிஎப் வாசன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில், டிடிஎஃப் வாசன் பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்ய இருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது. இதன்படி நடிகை சங்கீதா இணையத்தில் தனது கணவரது பெயர் வி என்ற எழுத்தில் தொடங்கும் என்று பதிவிட்டார். இதற்கு நெட்டிசன்கள் டி டி எஃப் வாசனை டேக் செய்து கமெண்ட் செய்து வந்தனர். இப்பதிவு வைரலானது. இதனைத் தொடர்ந்து நடிகை சங்கீதா தனது திருமண பத்திரிகையை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.