மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்திற்காக அவரது மனைவி ஷாலினி செய்த செயல்.! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!?
தமிழில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அஜித் குமார். இவர் தமிழில் 90ல் ஆரம்பமாகி தற்போது வரை பல ஹிட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். ஆரம்ப திரைத்துறையில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும், தற்போது அஜித்தை பிடிக்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் நடிகர் அஜித். மேலும் வருடத்திற்கு ஒரு படமே வெளிவந்தாலும் அந்த படம் ஹிட் திரைப்படமாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் அஜித் இருந்து வருகிறார். ஆனால் சமீபத்தில் இவர் ரசிகர்களிடம் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களை கோபமடைய செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது உருவாகிவரும் விடாமுயற்சி திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இப்படம் வெளிநாட்டில் படப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல காரணங்களுக்காக படப்பிடிப்பு தாமதமாகியுள்ளது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்கு அவரது மனைவி ஷாலினி விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஒரு சில நெட்டிசன்கள் இரு சக்கர வாகனத்தை பரிசாக கொடுத்திருக்கீங்க? மறுபடியும் ஊர் சுற்று போகிறாரா? விடாமுயற்சி படம் வருமா வராதா? என்று கேட்டு கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.