திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள்.. ரஜினி செய்த செயலால் வெறுப்பான ரசிகர்கள்.?
தமிழ் திரை துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.
தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஸ்டார் எனும் பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. தற்போது ரஜினிகாந்த் மற்றுமொரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கேரளா, தமிழ்நாடு போன்ற இடங்களில் நடந்து வருகிறது.
இது போன்ற நிலையில், திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் தன்னை பார்க்க வந்த ரசிகர்கள் நீண்ட நேரமாக தலைவா தலைவா என கத்திக்கொண்டு காத்திருந்தனர். ஆனால் ரஜினி அங்கு வந்து வணக்கம் என்று கூறிவிட்டு உடனே கிளம்பி விட்டார். இதனால் ரசிகர்கள் ரஜினியின் மீது கடுப்பில் இருந்து வருகின்றனர் என்று கூறப்பட்டு வருகிறது.