திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய மாமனார்.! நடிகை பரபரப்பு புகார்.!
சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கெருங்கம்பாக்கம், பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள துணை நடிகை. இவர் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல திரைப்படங்கள் மற்றும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கும் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை ஒருவரும் உள்ளார். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த துணை நடிகை, நான் நடிகையாக இருப்பதால் என் மாமனார் சரவணவேல், மாமியார் சாந்தி ஆகியோர் என்னை மதிப்பதில்லை. பல முறை என் மாமனார் நீ நடிகை தானே என கேட்டு என் மீது உடல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார்.
இது குறித்து காவல் துறையில் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு கூட என் மாமனார் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் அவரை தடுத்ததால் பெரிய மர கட்டையை கொண்டு என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார். இதனால் பலத்த காயம் அடைந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன்.
இது குறித்து மாங்காடு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளேன் என தெரிவித்தார். போலீசார் இது குறித்து துணை நடிகையின் மாமனார் -மாமியாரிடம் விசாரிக்க சென்றபோது அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். எனவே அவர்களை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகிறார்கள்.