"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
சந்தானம், கார்த்தி இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதல்.. இனி சந்தானம் கூட நடிக்க முடியாது என படபிடிப்பின் போது சண்டையிட்ட கார்த்தி.!
கோலிவுட் திரையுலகில் 2004 ஆம் வருடம் வெளியான 'பருத்தி வீரன்' திரைபடத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கார்த்தி. முதல் படமே மிகபெரிய ஹிட்டாகி கார்த்தியின் நடிப்பு பெரிதளவில் பேசபட்டது. இதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முண்ணனி நடிகரான கார்த்தி தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது. இதுபோன்ற நிலையில் நடிகர் கார்த்தி காமெடி நடிகர் சந்தானத்துடன் இணைந்து இனி நடிக்க மாட்டேன் என்ற கூறியிருக்கிறார். இச்செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.
2012 ஆம் வருடம் கார்த்தி, பிரணிதா, சந்தானம், நடிப்பில் சங்கர் தயாள் இயக்கத்தில் வெளியானது 'சகுனி' திரைப்படம். ஜி.வி பிரகாஷ் இசையமைத்த இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைத்திருந்தது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சந்தானம், நடிகர் கார்த்தியை நகைச்சுவை என்ற பெயரில் அதிகமாக கலாய்த்துள்ளார். கோபமடைந்த கார்த்தி இனி சந்தானத்துடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சண்டை போட்டுள்ளார். அவரை இயக்குநர் சமாதானபடுத்தி படபிடிப்பு முடித்திருக்கிறார். இப்படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.