மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கல்யாணம் பண்ணா அந்த மாதிரி விஷயங்களை மனைவிக்கு கொடுக்க என்னால முடியாது".. கல்யாணம் வேணாம் என்று அடம்பிடிக்கும் பிரேம்ஜி.?
தமிழ் திரையுலகின் முன்னனி இயக்குனர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரனுமான நடிகர் பிரேம்ஜி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 2007 ஆம் வருடம் வெளியான 'சென்னை 600028' திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன் பின்பு மங்காத்தா, சேட்டை, கோவா, சென்னை 600028 இரண்டாம் பாகம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சில பாடல்களும் பாடியிருக்கிறார் இதன்படி திரைதுறையில் பிரபலமாகி தனக்கென ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்.
இதுபோன்றநிலையில், பிரேம்ஜிக்கு 40வயதை கடந்தும் திருமணமாகமல் இருப்பதால் அவரது தந்தையான கங்கை அமரன் ஒருபேட்டியில் கவலை தெரிவித்துள்ளார். அவர் அப்பேட்டியில் கூறியதாவது பிரேம்ஜிக்கு திருமண ஆசையே இல்லை.
திருமணம் பற்றி பேசினாலே "என்னால் பொண்டாட்டிக்கு சேலை வாங்கிட்டு, குழந்தைகளை பெத்துக்கிட்டு இருக்க முடியாது" என்று கூறுகிறார். நான் பிரேம்ஜியின் வீட்டில் தான் இருக்கிறேன். என்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறார். இவ்வாறு கங்கை அமரன் பேட்டியில் கூறியிருக்கிறார்.