மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீயாய் வேலை பார்க்கும் துணிவு பட முக்கிய பிரபலம்.! அவரே பகிர்ந்த புகைப்படம்.! யார்னு பார்த்தீங்களா??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் மூன்றாவது முறையாக எச்.வினோத்துடன் கூட்டணியில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. இதில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் உட்பட பலரும் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படம்
உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். துணிவு படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசைக்கருவிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வொர்க்கிங் என பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் துணிவு படத்தின் முதல் சிங்கிள் எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருப்பதாகவும், பாடலை விரைவில் வெளியிடுமாறும் கமெண்ட் செய்துள்ளனர்.
Working !!! pic.twitter.com/9ey83uGUxw
— Ghibran (@GhibranOfficial) November 17, 2022