#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அவரா இது? என கேட்கும் அளவிற்கு மாறிய கில்லி பட விஜய் தங்கை! புகைப்படம்!
விஜய் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று கில்லி. நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படம், மிகப்பெரிய திருப்பு முனை என்றால் அது கில்லி திரைப்படம் தான். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது கில்லி திரைப்படம்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிதித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் மிரட்டியிருந்தார். படத்தில் பிரகாஷ்ராஜ் பேசிய வசனங்கள் இன்றுவரை பிரபலம். மேலும் படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா என்ற கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்திருந்தார். விஜய், ஜெனிஃபர் இருவரும் சேர்ந்து படத்தில் செய்யும் கலாட்டா படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் இதுவும் ஓன்று என்றே கூறலாம்.
படத்தில் சிறுமியாக தோற்றமளித்த ஜெனிஃபர் தற்போது நன்கு வளர்ந்து படங்களில் நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஓன்று பயங்கர வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு பயங்கர மாடர்னாக கவர்ச்சியாக தோற்றமளிக்கின்றார் ஜெனிபர். இதோ அந்த புகைப்படம்.