#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல் முறையாக வெளியான கில்லி பட புகழ் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி மனைவி, மகன் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ஆஷிஷ் வித்யார்த்தி. 1962 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், கனடா, ஆங்கிலம் என பல்வேறு மொழிப்படங்களில் வில்லன் மட்டும் குணசித்ர நடிகராக நடித்துள்ளார். மேலும் சிறந்த சப்போர்டிங் கதாபாத்திரத்திற்கான தேசிய விருதினையும் வாங்கியுள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி.
ஆனந்த் என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் யேஅரைகுறைய 40 படங்களுக்கு மேல் ஹிந்தியில் நடித்துள்ளார், மேலும் ஒரு ஆங்கில படத்திலும் நடித்துள்ளார் ஆஷிஷ். அதன்பிறகு 2001 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலையே பிரபலமானார் ஆஷிஷ் வித்யார்த்தி.
அதன்பின்னர் பாபா, ஏழுமலை, பகவதி, தமிழ், தமிழன் என பல்வேறு படங்களில் வில்லனாகவும் குணசித்ர நடிகராகவும் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் விஜய்க்கு தந்தையாக குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ஆஷிஷ் வித்யார்த்தி.
இந்நிலையில் பல்வேறு படங்களில் இவரது முகத்தை நாம் பார்த்துளோம். ஆனால், இவரது மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் முதல் முறையாக இவரது மனைவி மற்றும் மகனின் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.