#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய்யுடன் நடித்தது தப்பா போச்சு! பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி!
விஜய்யின் திரை பயணத்தில் மிகவும் முக்கியமான படம் ‘கில்லி’. இந்தப் படத்தை இன்றளவும் விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத படம். இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கில்லி. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் பேசிய வசனங்கள் இன்று வரை பிரபலம்.
படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜெனிபர் நடித்திருப்பார். இவர் விஜய்யுடன் சேர்ந்து செய்யும் கலாட்டா மிகவும் ரசிக்கும் படி இருக்கும். விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர், இப்போதும் ரசிகர்கள் நினைவில் தங்கையாக காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் தனது சினிமா பயணம் பற்றி பேசியுள்ள நடிகை ஜென்னிபர் ‘‘விஜய்யுடன் ‘கில்லி’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தது மிகப்பெரிய பாக்கியம். ஆனால் அதில் இருந்து மக்கள் வெளிவராதது தான் எனக்கு பெரிய கஷ்டமாக இருக்கிறது. இன்றுவரை எல்லோரும் என்னை விஜயின் தங்கையாகவே பார்க்கின்றனர். இதனால் எனக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு குறைகிறது.
‘கில்லி’ படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பெண்ணா இது, இவ்வளவு பெரியவளா என்று கூறிகிறார்கள். எனக்கு நாயகியாக நடிக்க வேண்டும் என்பது ஆசை, ஆனால் ‘கில்லி’ படத்தில் இருந்து மக்கள் வெளிவராததால் எனக்கு படம் மைனஸாக அமைந்தது’’ என்று வருத்தத்துடன் கூறினார்.