மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்தப் படத்தை பார்த்ததுக்கு எனக்கு ஒரு சொகுசு கார் குடுங்க" - ஜெயிலர் படத்தை கலாய்த்த எம்பி.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி வெளியான திரைப்படம் ஜெய்லர். இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.
தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களின் தோல்விக்கு பிறகு வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்தத் திரைப்படம் இதுவரை 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.
மேலும் அவர்களுக்கு காசோலையும் வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் பற்றி தமிழக பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் ஜெயிலர் திரைப்படத்தை தான் சொல்கிறாரா அல்லது வேறு ஏதேனும் திரைப்படத்தை குறிப்பிட்டு இருக்கிறாரா என ரசிகர்கள் குழம்பி போய் இருக்கின்றனர்.
நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்.
— Karti P Chidambaram (@KartiPC) September 9, 2023
தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கும் கார்த்தி சிதம்பரம்" நேற்று இரவு ஒரு படம் பார்த்தேன் அந்த படத்தை நான் பார்த்ததற்கு தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு கார் பரிசளித்திருக்க வேண்டும்" என குறிப்பிட்டு இருக்கிறார். இதிலிருந்து நேற்று அவர் பார்த்த அந்த திரைப்படம் ஜெயிலர் படமாக தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.