மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமல்ஹாசனின் 234 படத்தில் இணைந்த வாரிசு நடிகர்.. யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, பிரபாஸ் உடன் கல்கி 2898 ஏடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.
இதில், மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள 234வது திரைப்படத்திற்கு தக் லைஃப் என பெயர் வைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு டைட்டில் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது.
மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிரபல நடிகரும், கார்த்தியின் மகனுமான கௌதம் கார்த்திக் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கௌதம் கார்த்திக் ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் கடல் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.