மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறைந்த சின்ன கலைவாணர் விவேக்கிற்கு கிடைக்கும் கௌரவம்! பிரபலம் வெளியிட்ட தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த பிரபலமாக கொடிகட்டிப் பறந்தவர் விவேக். அவர் சமூக சீர்திருத்தக் கருத்துகளை தனது நகைச்சுவையின் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். மேலும் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்ட அவர் லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் பேரிடியை கொடுத்தது. நடிகர் விவேக் இறந்து ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், அவரது நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பல பிரபலங்களும் நடிகர் விவேக்குடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அப்பொழுது பேசிய தி.மு.க. தலைமை நிலையப் பொறுப்பாளரும், நடிகர் சங்கத்தின் துணைத்தலைவருமான பூச்சி முருகன், "நடிகர் விவேக் தற்போது இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்த சமுதாயத்திற்காக நல்ல கருத்துகளை விதைத்துள்ளார். மரக்கன்றுகளை நட்டுள்ளார். அந்த மரங்களின் மூலமாக அவர் எப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
நடிகர் விவேக்கின் நினைவாக சென்னையில் ஒரு தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவரும், உரிய முறையில் கடிதம் கொடுத்தால் நிச்சயமாக செய்யலாம் எனக் கூறியுள்ளார். அதனை தயார் செய்யுங்கள்" என பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். மேலும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் விவேக் பசுமை கலாம் அமைப்பின் சார்பாக மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது.