#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காலங்காலமா அப்படிதானே நடக்குது.. திருமணத்தில் இளைஞர் செய்த அதிரடி மாற்றம்! நெகிழ்ந்துபோன மணப்பெண்!!
மும்பையைச் சேர்ந்த தம்பதிகள் தனுஜா பாட்டீல் மற்றும் ஷார்துல் கதம். 4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவருக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் தள்ளிப்போனது. இந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற திட்டமிட்ட நிலையில் திடீரென ஷார்துல்க்கு யோசனை ஒன்று தோன்றியுள்ளது.
அதாவது காலங்காலமாக திருமண சடங்குகள் அனைத்துமே பெண்களுக்கே நடைபெறுவதாகவும், ஆணாதிக்கத்தை குறிக்கும் வகையில் இருப்பதாகவும் அதையே நாமும் பின்பற்றக்கூடாது என எண்ணிய ஷார்துல் மணமக்கள் இருவரும் மாறி மாறி தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பெற்றோர்கள், உறவினர்களிடம் கூறிய நிலையில் அவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த முடிவில் உறுதியாக இருந்து திருமணத்தின்போது தனுஷா தனக்கு தாலியை அணிவிக்க அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.
இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த அவர், எல்லா சடங்குகளும் ஆணுக்கே ஏற்றது போல், ஒருதலைப்பட்சமாக இருப்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் தான் இந்த தாலியை அணிந்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.