மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஜி.வி பிரகாஷ் குமார்.!
தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் பன்முக திறமை கொண்டவர் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி செய்துள்ளார். அதன்படி அந்த சிறுவனின் மூளைக்கு அருகில் ஒரு கட்டி உருவாகியுள்ளது.
அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக நீக்குவதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் 75 ஆயிரம் ரூபாயை நிதி உதவியாக ஆன்லைன் மூலம் அளித்துள்ளார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் என்னால் முடிந்த உதவி என தெரிவித்துள்ளார்.