#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"நான் இப்படியொரு நிலைமையில் இருப்பதற்கு இயக்குனர் பாலா தான் காரணம்" மேடையில் உண்மையை போட்டுடைத்த ஜிவி பிரகாஷ்..
கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது நூறாவது திரைப்படத்தில் இசையமைக்கவிருக்கிறார்.
கதாநாயகனாக 'டார்லிங்' திரைப்படத்தில் ஆரம்பித்து தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தற்போது 'அடியே' திரைப்படத்தில் நடித்து 25 வது திரைப்படமாக தனது மைல் கல்லை எட்டியுள்ளார் ஜீவி பிரகாஷ். தற்போது இவர் நடிப்பில் அடியே எனும் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷ் நிகழ்ச்சி மேடையில் பேசிய போது, "நான் நடிப்பில் இந்த அளவிற்கு முன்னேறியதற்கு இயக்குனர் பாலா தான் முக்கிய காரணம். அவரிடம் தான் நான் இந்த அளவிற்கு கற்றுக் கொண்டேன்" என்று மேடையில் பேசினார்.
ஜிவி பிரகாஷின் இந்த பேச்சைக் கேட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஜிவி பிரகாஷ், ஜோதிகா, இவானா நடிப்பில் ' நாச்சியார்' திரைப்படத்தை இயக்குனர் பாலா தான் இயக்கினார். இந்த திரைப்படத்தில் எனக்கு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்து, நடிக்க கற்றுக் கொடுத்தது பாலா தான் என்று குறிப்பிட்டு இருப்பது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.