பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மீண்டும் மெகா கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படம்; உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்!
கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு, ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. முதல் முறையாக இந்த கூட்டணியில் உருவான அந்த காதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து அதே கூட்டணி இணைந்து 2015-ல் வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
இதனைத் தொடர்ந்து இதே கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ட்விட்டரில் வெளியான புகைப்படத்தால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கண்ட சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மீண்டும் இணைகிறது கௌதம்மேனன் ரஹ்மான் சிம்பு கூட்டணி 🎬🎬🎬🎬#GVMSTRARRNxT@menongautham #STR @arrahman pic.twitter.com/X4JrTR12KB
— VK here (@VK_talks) October 17, 2018