மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காமெடி படத்தை இயக்கும் இயக்குனர் வினோத்.. நடிகர் யார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினோத். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகியவை திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் 233 வது திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. ஆனால் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினத்தின் திரைப்படத்தில் பிஸியாக இருப்பதால் 233 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கமலின் 233 வது திரைப்படத்திற்கு முன்பாக பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை வைத்து, அரசியல் கலந்த காமெடி திரைப்படத்தில் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.