மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு நடிகையாக இருந்தால் இதையெல்லாம் அனுபவிக்கணுமா! அழுது புலம்பும் ஹன்சிகா
தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொழுகொழுவென இருக்கும் ஹன்சிகா தனது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதுவரை எந்தவித சர்ச்சையிலும் சிக்காத ஹன்சிகாவிற்கு சமீபத்தில் ஒரு சோதனை வந்தது.
சமீபத்தில் இவரது அந்தரங்க கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து ஹன்சிகா தன்னுடைய மொபைல் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து தன்னுடைய தொழில்நுட்பக் குழு வேலை பார்த்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ஹன்சிகா தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் தன்னுடைய புகைப்படங்கள் வெளியானது பற்றி அறிந்த பொழுது இதயமே வெடித்து விட்டது போல் உணர்ந்தேன் என கூறியுள்ளார். மேலும் இதுபோன்று பிகினி உடையில் புகைப்படம் எடுப்பது சினிமா பிரபலங்களுக்கு சாதாரண விஷயம். அவர்கள் அப்படித்தான் என்று வசைபாடியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
27 வயதான ஹன்சிகா, வெளியான புகைப்படங்களில் சில புகைப்படங்கள் உண்மையானவை அல்ல. அந்த புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை. நான் ஒரு படத்திற்காகவோ அல்லது பத்திரிக்கைக்காகவோ பிகினி உடையில் புகைப்படங்கள் எடுத்து இருந்தாலும் அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் அந்த புகைப்படங்களை என்னுடைய அனுமதி இன்றி வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம். மேலும் இதனை செய்தவர்களை கடவுள் நிச்சயம் தண்டிப்பார் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் விளக்கம் அளித்துள்ள அவர் வெளியான புகைப்படங்களில் சில புகைப்படங்கள் நான்கு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை. ஆனால் இவற்றை தற்பொழுது ஒரு சிலர் வேண்டுமென்றே பரப்பியுள்ளனர். ஒரு பிரபலமாக இருப்பதற்கு அவர்கள் கொடுக்கும் கூலி இதுதானா என புலம்பி தீர்த்துள்ளார் நடிகை ஹன்சிகா. மேலும் தனக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பேசியுள்ள ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.