ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"என் முகத்தைப் பார்த்து எனக்கே பயமாக இருந்தது" ஹன்சிகா மோத்வானியின் வைரலாகும் பேட்டி.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கான தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலை நாட்டியவர் ஹன்சிகா.
மேலும் தமிழில் ஆரம்பத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஹன்சிகா முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து சினிமாவில் நடித்து பிசியான நடிகையாக இருந்து வரும் ஹன்சிகா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மாடலிங், பிசினஸ், திரைத்துறை என அனைத்திலும் பிஸியாக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில் தற்போது ஹன்சிகா மோத்வானி 'கூகுள் குட்டப்பா' படத்தின் இயக்குனரான சபரி குருவின் இயக்கத்தில் 'கார்டியன்' என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய் சந்தர் தயாரிப்பில் சுமன், தங்கதுரை, சுரேஷ் மேனன், கிருசி போன்றவர்கள் நடித்துள்ளனர்.
இது போன்ற நிலையில் ஹன்சிகா சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் இப்படத்தை குறித்து பேசியிருக்கிறார். அதாவது 'அரண்மனை 2' என்ற பேய் படத்தில் நடித்ததற்கு பிறகு 'கார்டியன்' என்ற இந்த ஹாரர் படத்தில் நடித்துள்ளேன். இரவு 12 மணிக்கு சுடுகாட்டில் படப்பிடிப்பு காட்சி அமைக்கப்பட்டது. அக்காட்சியை நடித்து முடிப்பதற்கு எனக்கு சவாலாக இருந்தது. படத்திற்காக பேய் மேக்கப் போட்டுக் கொண்ட போது என் முகத்தை பார்த்து எனக்கே பயமாக இருந்தது என்று சிரித்துக் கொண்டே பேட்டி அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.