#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சரவணா ஸ்டோர் உரிமையாளருக்கு ஜோடி இந்த பிரபல நடிகையா? தீயாய் பரவும் தகவலால் ஹன்சிகாவின் ரியாக்ஷனை பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமான இவர் ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் நடித்துவிட்டு 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஆம்பள, ரோமியோ ஜுலியட், ஆம்பள, அரண்மனை, போகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த இவர் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
இந்நிலையில் கடந்த சில படங்களில் உடல் எடை கூடி குண்டாக இருந்த ஹன்சிகா தற்போது தீவிர உடல் பயிற்சி மூலம் தங்களது உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் அவர் விளம்பர தொலைக்காட்சியிலும் நடித்துள்ளார். இந்நிலையில் விளம்பரங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் தீயாய் பரவிவருகிறது. மேலும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இந்த தகவல் வைரலான நிலையில் இதனை கண்ட ஹன்சிகா பதறியடித்து இது உண்மை இல்லை என கூறி அந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
NOT TRUE ! ❎ pic.twitter.com/uY0jq5OH8q
— Hansika (@ihansika) October 2, 2019