திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
HBD Priya Bhavani Sankar: ரசிகர்களின் மனம்கவர்ந்த தமிழ் நடிகை: பிரியா பவானி சங்கருக்கு இன்று பிறந்தநாள்..!
தமிழ் திரையுலகில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், பத்து தல ஆகிய படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பு பெற்ற முன்னணி நடிகை பிரியா பவானி சங்கர். இவர் எந்த படங்களில் நடித்தாலும் அதில் தனக்கென தனி அங்கீகாரத்தை பதித்து விடும் நடிகைகளில் கவனிக்கத்தக்கவர்.
எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய குணம் கொண்ட பிரியா பவானி சங்கருக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு தற்போது 33 வயதாகிறது. தொலைக்காட்சியில் தொடங்கிய அவரின் வாழ்க்கை தற்போது வெள்ளித்துறையில் ஜொலித்து வருகிறது.
நடப்பு ஆண்டில் அவர் நடித்துள்ள டிமாண்டி காலனி 2, ரத்னம், பீமா, இந்தியன் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இன்று அவரின் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.