திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னடா இது.. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிற்கு வந்த சோதனை.!? சமூக வலைத்தளங்கள் திடீர் முடக்கம் ஏன்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தமிழில் பல திரைப்படங்களில் இசையமைத்து ஹிட் பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.
ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைத்து வந்த ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த ஐந்து வருடங்களாக மிகவும் குறைவான படங்களிலேயே இசையமைத்து வருகிறார்.
இவர் இசையமைத்த பாடல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டங்கள் இன்று வரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஏன் தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை என்று இணையத்தில் இவரது ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.
இதனை அடுத்து இவரது பிறந்த நாளுக்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், "விரைவில் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்க ஆரம்பிப்பேன் என்றும், ரசிகர்களிடம் தொடர்ந்து பேசுவதற்கு ஆசை தான் ஆனால் எனது சமூக வலைதள பக்கங்கள் நான்கு மாதங்களாக ஹேக் செய்யப்பட்டுள்ளது" என்றும் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி "என்னடா இது ஹாரிஸ் ஜெயராஜுக்கு வந்த சோதனை" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இவர் இசையமைக்கப் போகும் படத்தில் வாழ்த்துக்கள் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.