மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்.! இணையத்தை கலக்கும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்.! இதோ..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார். அது விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் கடந்த ஆயுத பூஜையன்று நர்மதா என்ற பெண்ணுடன் தனக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் இன்று சென்னை ஜிபிஎன் பேலஸில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. ஹரிஷ் கல்யாண்- நர்மதா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் புதுமண ஜோடியினருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்