மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 வருஷமாச்சு.! திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகிர்ந்த வீடியோ! வருத்தத்தில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதிலும் இடம்பிடித்தவர் ஹேமா. அவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலும் நடித்து வருகிறார்.
ஹேமா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவார். இந்த நிலையில் ஹேமா தற்போது விஜே சித்ராவின் வீடியோவை பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் பிரபலமாக இருந்த விஜே சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பலரது மனதையும் கொள்ளை கொண்டவர்.
அவர் இறந்து மூன்று வருடங்களான நிலையில் அவருடனான நினைவுகளை ஹேமா பகிர்ந்து, 3 வருடமாகிவிட்டது. நாங்கள் உன்னை ரொம்ப மிஸ் செய்கிறோம் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்களும் தங்களது வருத்தங்களை தெரிவித்துள்ளனர்.