மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்! பல பகீர் உண்மைகளை போட்டுடைத்த கணவர் ஹேமந்தின் நண்பர்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த மாதம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டார். சித்ரா ஹேமந்த் என்பவரை பதிவு திருமணம் செய்து இரண்டே மாதங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணை நடைபெற்றது.
மேலும் அவரது தற்கொலைக்கு காரணம் கணவர் ஹேமந்த்தான் என அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஹேமந்த் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேமந்தின் நெருங்கிய நண்பரான காஞ்சிபுரம் புதுப்பாக்கத்தை சேர்ந்த சையது ரோஹித் என்பவர் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஹேமந்த் பெரிய தொழிலதிபர் போல், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடன் நெருக்கமானவர் போல காட்டி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பணம் பறித்து வந்ததாகவும், பல முறை எச்சரித்தும் அவர் கேட்காததால் தான் அவரிடமிருந்து விலகியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், தொலைக்காட்சி தொடர்களில் சக நடிகருடன் நெருங்கி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஹேம்நாத்தின் ஜாமீன் வழக்கு விசாரணை ஜனவரி 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.