மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி இவர்தான் ஹீரோ! விஜய் டிவியின் பிரபல தொடரில் இருந்து விலகும் முக்கிய நடிகர்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபலம் அந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன், நாளுக்கு நாள் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அத்தகைய தொடர்களில் ஒன்றுதான் காற்றுக்கென்ன வேலி.
விஜய் தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தர்ஷன். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தர்ஷன் இதற்கு முன்பு அரண்மனைக்கிளி என்ற தொடரில் ஹீரோவாக நடித்து இருந்தார்.
இந்த நிலையில் தர்ஷன் தற்போது சில படங்களில் நடிக்க உள்ளதால் காற்றுக்கென்ன வேலி தொடரில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தொடரில் இவருக்கு பதில் சூர்யா கதாபாத்திரத்தில் சுவாமிநாதன் அனந்தராமன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.