ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அவிழ்க்கும் போது இதை செய்யக்கூடாது.! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!



high-court-rules-for-jallikattu-in-madurai

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும்  நடைபெறும். அவற்றிலும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

 இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி முதலாவதாக ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும்,  ஜனவரி 16ஆம் தேதி பாலமேட்டிலும், அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண லட்சக்கணக்கானோர் அப்பகுதிகளில் குவிவர்.

jallikattu

இந்த நிலையில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அவிழ்க்கும் போது உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயரை குறிப்பிட்டு அறிவிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பு தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்து மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்து தமிழக அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது