16 வயதில் திருமணம், 2 குழந்தை, 18 ல் விவாகரத்து., வாழ்க்கையின் துயரமான நாட்கள் குறித்து மனம்திறந்த நடிகை.!

ஹிந்தி திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருப்பவர் ஊர்வசி தோலகியா (Urvashi Dholakia). இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் தனது வாழ்நாட்களில் பட்ட துயரங்கள் தொடர்பாகவும் அவர் மனம்திறந்து பேசியுள்ளார்.
இது குறித்த பேட்டியில், "எனக்கு எப்போதும் வேலை, பணிச்சுமை என்ற வாழ்க்கையானது வேண்டாம். அது எனக்கு பிடிக்காது. நான் சிண்ட்ரெல்லா போல வாழ நினைக்கிறேன். அது சார்ந்த வாழ்க்கையே எனக்கு வேண்டும்.
எனது 16 வயதில் திருமணம் முடிந்து, 17 வயதில் இரட்டை குழந்தைகளை நான் பெற்றெடுத்தேன். அதனை தொடர்ந்து 18 வயதில் எனக்கு விவாகரத்தும் ஆனது" என்று கூறினார். தற்போது 44 வயதாகும் நடிகை ஊர்வஷி, தனது 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.