மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாரும் அறிந்திராத நடிகர் அஜித் நடித்த ஹிந்தி படம்! எப்போ? யாருடன் நடித்திருந்தார் தெரியுமா?
அல்டிமேட் ஸ்டார் அஜீத்திற்கு தமிழில் மட்டுமல்ல பிற மொழிகளிலும் பெருமளவிலான ரசிகர்பட்டாளம் உண்டு. அவரது எளிமையான சுபாவத்திற்கும், அசத்தலான நடிப்பிற்கும் உருவாகி இருக்கும் இந்த ரசிகர்களுக்கு அஜீத் இதுவரை நடித்திருக்கும் அத்தனை படங்கள் பற்றிய தகவல்களையும் அத்துப்படி. ஆனால் அவர்களில் பலருக்கு அஜீத் நடித்து சூப்பர் ஹிட் ஆன ஒரு பாலிவுட் படம் குறித்து அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பாலிவுட்டில் மிகப்பிரபல இயக்குனராக இப்போது இருக்கும் விஷ்ணுவர்தன், ஷாருக்கானின் நடித்த அசோகா படத்தில் உதவி இயக்குனராக ஒரு காலத்தில் பணியாற்றி வந்தார். அப்போது தான் அவருக்கு அஜீத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அசோகா படத்தில் அஜீத் நெகடிவ் ரோல் செய்திருப்பார்.
அந்த படத்தின் எடிட்டிங் வேலைகள் முடிவடைந்த பிறகு விஷ்ணுவர்தன் அசோகா படத்தின் டிரெயிலரை ஷாருக்கானுக்கு போட்டு காட்டியபோது விஷ்ணுவர்தனை பாராட்டிய ஷாருக்கான் அஜீத்தின் நடிப்பையும் வெகுவாக புகழ்ந்திருக்கிறார். அந்த விஷ்ணு வர்தனின் இயக்கத்தில் தான் அஜீத் அடுத்ததாக நடிக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் பிஸியாக இருப்பதால் விஷ்ணுவர்தனுடனான கூட்டணி விரைவில் அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.